அண்ணன் செல்வராகவனும் தம்பி தனுஷும் அடித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றார். நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அண்ணனும் தம்பியும் மோதிக்கொள்ளும் காட்சி எப்படி இருக்கப் போகின்றது என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர். இத்திரைப்படத்தை செல்வராகவனே இயக்கி நடிக்கின்றார். அண்ணன் செல்வராகவனை தனுஷ் குருவாக பார்க்கிறார். இந்நிலையில் படத்தில் எதிரியாக எப்படி நடிக்க போகிறார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.