பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் அருகே உள்ள சவுலூர்கதிரிபுரம் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 2 சகோதரர்கள் இருந்துள்ளனர். இதில் ராஜா என்பவர் இறந்து விட்டதால் இவருடைய சொத்துக்களை ராஜாவின் மனைவி மாது என்பவர் பராமரித்து வந்துள்ளார். இதனால் மாதையனுக்கும், மாதுவுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாதையன் அண்ணன் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து காவேரிப்பட்டினம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி கடந்த 2017-ஆம் ஆண்டு மாதயனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதை விசாரித்த நீதிபதி மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் 1,000 ரூபாய் அபராதமும் அதை கட்ட தவறினால் கூடுதலாக 1 ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.