Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அண்ணனுக்காக தீக்குளிக்க வந்தேன்” ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சம்பவம்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அண்ணனுக்காக தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன பள்ளப்பட்டி பகுதியில் முருகபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தென்னரசு என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தென்னரசு திடீரென தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தென்னரசுவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் தென்னரசு கூறியதாவது, எனது சகோதரர் முருகபாண்டியின் சொத்துக்களை உறவினர்கள் பறித்துக் கொண்டனர். இதுகுறித்து புகார் அளிக்க நாங்கள் இரண்டு பேரும் வந்தோம். அப்போது அண்ணனுக்காக நான் தீக்குளிக்க முயன்ற என தென்னரசு தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அறிவுரை கூறி இரண்டு பேரையும் அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |