தனது மகனின் திருமணத்தில் மணமகளாக வீற்றிருக்கும் பெண் காணமல் போன தனது மகள் என தாய் கண்டுபிடித்த நெகிழ்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவில் ஜியாங்சு நகரில் தனது மகன் திருமணத்திற்கு சென்றுள்ள தாய்க்கு தனது வருங்கால மருமகள் சிறு வயதில் காணாமல் போன தன் வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது தனது மகனின் திருமணத்திற்கு முன்பாக மணமகளை வரவேற்கும் நிகழ்ச்சியின் போது சிறு வயதில் காணாமல் போன தன் மகளின் கையில் இருந்த பிறவி குறி மச்சம் மணப்பெண்ணின் கையில் இருப்பதை மணமகனின் தாயார் கவனித்துள்ளார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த மணமகனின் தாயார், மணமகளின் பெற்றோரிடம் விசாரித்தபோது இப்பெண் அவர்களின் சொந்த மகள் இல்லை என்றும், அந்த பெண் அவர்களின் வளர்ப்பு மகள் என்றும் அவருக்கு தெரியவந்துள்ளது.
இந்த உண்மை தெரிந்த உடன் தாயும் – மகளும் கட்டிபிடித்து கதறியழுது தங்களது பாசத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனையட்டுத்து தனது சகோதரனை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று மணமகள் குழம்பி தவிர்த்துள்ளார். அப்போது மணமகன் தாயார் அவர் தனது வயிற்றில் பிறந்த மகன் இல்லை என்றும், தனது மகள் காணாமல் போனதால் அவரை தத்தெடுத்து வளர்த்ததாகவும் மற்றொரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதன் பின் இவர்கள் இருவரும் ரத்த சொந்தம் இல்லை என்பதனால் திருமணத்தில் எவ்வித தடை யும் இல்லை என தாயார் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இருவருக்கும் திருமணம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று உள்ளது.