Categories
தேசிய செய்திகள்

அண்ணனுக்கு பார்த்த பெண்ணை சீரழித்து கொன்ற தம்பி!…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

பீகார் மாநிலம் பாட்னாவின் ஜானிபூர் பகுதியிலிருந்து இளம்பெண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அர்வால் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கும், ஜெகனாபாத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித்குமாருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டட்து. அப்பெண்ணுக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

இதில் ரஞ்சித்தின் இளைய சகோதரன் பிஜேந்திரன். இதற்கிடையில் திருமணம் நின்றுபோனதை அடுத்து அப்பெண்ணுடன் பிஜேந்திரன் நெருங்கி பழகி உள்ளார். அதன்பின் பிஜேந்திரனும், அந்த பெண்ணும் அடிக்கடி போனில் பேசி வந்தனர். இந்நிலையில் சென்ற நவம்பர் 16ஆம் தேதி அன்று பிஜேந்திரன் அந்த பெண்ணுக்கு போன்செய்து அர்வால் பஜாரில் தன்னை வந்து சந்திக்க அழைத்துள்ளார். அதன்படி அங்கு சென்ற பெண்ணை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று பிஜேந்திரன் பாலியல் செய்துள்ளார்.

அதன்பின் அந்த பெண்ணை, பிஜேந்திரன் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். பின் ஆள்நடமாட்டம் இல்லாத புதர் நிறைந்த இடத்தில் அவரது உடலை புதைத்ததாக காவல்துறையினர் விசாரணையில் பிஜேந்திரன் கூறினார். உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு 10 கிலோ உப்பை அந்த பெண்ணின் உடல் மீது கொட்டியதாக தெரிவித்துள்ளார். உப்பை கொட்டினால் அவரது உடல் விரைவாக அழுகும் எனவும் பின் உடலை அடையாளம் காண்பது கடினம் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |