அண்ணனுக்கு முன்பே தம்பி திருமணம் செய்து கொண்டதால் அண்ணன், தம்பியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பெஹ்ருகா கிராமத்தை சேர்ந்த குஷ்வாஹா என்பவர் வாழ்ந்து வருகிறார். அவர் தனக்கு முன்னதாக தம்பி திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் கணவன் மனைவி இருவரும் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போது தம்பி என்றும் பாராமல் அவரை கொலை செய்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போது அவர் தனக்கு முன்பாகவே தம்பி திருமணம் செய்து கொள்வாரா என்ற அச்சத்தில் இருந்ததாகவும், அந்த அச்சத்தின் படியே அவரும் திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறினார். அதனால்தான் இத்தகைய செயலை செய்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து தலைமறைவாகியுள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் கொலை செய்ய பயன்படுத்திய கோடரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.