Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அண்ணனை ஓட ஓட அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தம்பி”…. கைது செய்த போலீஸார்…!!!!!

தம்பியே அண்ணனை ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி வேலை செய்து வருகின்றார். இவரின் தம்பியும் திருமணம் ஆனவர். இவர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியண்ணன் வீதியில் லேபில் பணியாற்றி வருகின்றார். குடிப்பழக்கம் உள்ள அருண்பாண்டியன் அடிக்கடி மது அருந்திவிட்டு அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்ததால் அண்ணன் தம்பிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அருண்பாண்டியன் மது அருந்திவிட்டு அஜித் குமார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதால் கோபத்தில் இருந்த அஜித்குமார் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஓட்டல் வேலைக்கு சென்று கொண்டிருந்த அருண்பாண்டியனை சமாதானப்படுத்த முயற்சித்த பொழுது அருண்பாண்டியன் குடிபோதையில் இருந்ததால் தகராறில் ஈடுபட்டு இருக்கின்றார்.

இதனால் அஜித்குமார் ஆத்திரமடைந்து கறி வெட்டும் அரிவாளால் அண்ணனை வெட்ட முயற்சித்தபோது தம்பியிடம் இருந்து தப்பித்து அருண்பாண்டியன் அங்கிருந்து ஓடியுள்ளார். ஆனால் அஜித் குமார் அவரை துரத்திச் சென்றுவெட்டியுள்ளார். இதனால் அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அருண்பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

Categories

Tech |