ஆ.ராசா இந்து குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையானது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் ஆ.ராசாவை குறி வைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களை குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும் அவதூறு பரப்புவதுமான போக்குகளை இனியும் சதித்துக்கொண்டு இருக்க முடியாது.
பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரம கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அரச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது. மேலும் அவருடைய கருத்துக்கு பக்கபலமாகவும் இருக்கிறது. ஈராயிரம் வருடங்களுக்கு முன்பு முன்னரே பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு செய்தொழில் வேற்றுமையான் என்று உயிர்ம சமத்துவத்தை தமிழ் மறையோன் வள்ளுவ பெருமகனார் போதிக்கிறார். சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீரென்று பாடுகிறார் திருநாவுக்கரசர்.
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரசன்டையிலே ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகிர் என்று வள்ளலார் பாடுகிறார். ஆ l.ராசா அரசியல் இயக்கத்தாலும் கொள்கை நிலைபாட்டாலும் மாறுபட்டாலும் அவர் இந்த மண்ணின் மகன். தமிழகத்தின் மிக முக்கியமான கருத்தாளுமை. மதவாதிகள் அவரை நோக்கி இழி சொற்களை வீசுவதோ அனுமதிக்கவோ அவரை விட்டுக் கொடுக்க முடியாது. அண்ணன் ராசாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பவர்களுக்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.