Categories
அரசியல் மாநில செய்திகள்

”அண்ணன்” என எடப்பாடி சொன்னாரே…! இப்படி மட்டும் ஆதாயம் தேடாதீங்க ? ஓபிஎஸ்-சுக்கு அட்வைஸ் சொன்ன ”மாஜி”

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பொதுக்குழு நடக்க கூடாது என எல்லாம் செய்தும், அந்த முயற்சியில் தோல்வி கண்ட பிறகு ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகின்றார். அப்படி இருந்தும் கூட பாசமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் என்ன சொன்னார்கள் ? அவரை அண்ணன் என்றுதான் அழைத்தார், பொதுக்குழுவில் அண்ணன் என்றுதான் அழைத்தார். தலைமை கழக நிர்வாகிகள் நாங்கள் உட்பட அமைதி காத்து தொண்டர்களை ஆசுவாசப்படுத்தி, தங்களது உரிமையை பரித்தார்கள்,

தங்களுக்கு உரிமை இல்லை என்று மறுக்கிறார்கள் என்கின்ற அந்த ஆதங்கத்தில் இந்த தொண்டர்களை ஆசுவாசப்படுத்துவதற்கு எல்லோரும் முயற்சி செய்தார். அந்த முயற்சியில் எல்லோரும் ஈடுபட்டார்கள். அண்ணன் எடப்பாடி அவர்கள் பலமுறை அந்த மைக்கில் அவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அண்ணன் தங்கமணி போன்றவர்கள் மரியாதைக்குரிய வேலுமணி போன்றவர்கள் எல்லோரும் சொன்னார்கள், இதுதான் அங்கே நடைபெற்றது.

இருந்தபோதிலும் சில விரும்பத்தகாத செயல்கள் அங்கே நடைபெற்றிருந்தால் தொண்டர்கள் தங்களது உரிமைகளை பறிக்கப்பட்டதை அதன் வெளி காட்டுவதாக இருக்கிறது. அது யாரும் விரும்புவதில்லை, அதை யாரும் ஆதரிக்கவும் இல்லை, அது நடைபெற்று இருக்கக் கூடாது என்பதுதான் எல்லாருடைய கருத்து. ஆனால் தொண்டர்களுடைய மனக்குமுறல் அது வெளிப்பட்டு இருக்கிறது, அதை வைத்து நீங்கள் ஆதாயம் தேட வேண்டாம் என்று சொன்னால்,

அதை வைத்து பிளவு ஏற்படுத்தலாம் என்று சொன்னால், நான் கேட்கிறேன் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து, புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சாதி,  சமய,  இன வேறுபாடு என்றைக்கு பார்க்கப்பட்டிருக்கிறது ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |