லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கம்பம் தெருவில் லாரி ஓட்டுனரான கதிரேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கதிரேசனுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கதிரேசன் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதிரேசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.