Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அண்ணன்-தம்பி இப்படியா பண்ணுறது” கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரையில் கத்திக்குத்தால் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அண்ணன் தெய்வலிங்கம் தம்பி அழகுலிங்கம் என்பவர்கள் வசித்து வருகிறார்கள். அதே பகுதியில் ஜனகவேல் என்பவரும் வசித்து வந்தார். இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஜனகவேலுடன் முன்விரோதம் இருந்திருக்கிறது. இதையடுத்து சம்பவத்தன்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அண்ணனும், தம்பியும் ஜனகவேலை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்கள்.

இதனால் படுகாயமடைந்த ஜனகவேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த சோழவந்தான் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கில் அண்ணனையும் தம்பியையும் கைது செய்தனர். இதற்கிடையே ஜெனகவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கொலை வழக்காக மாறியதால் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |