Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அண்ணன் தம்பி மீது தாக்குதல்…. உறவினர்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு….!!!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகில் உள்ள வகுத்துப்பட்டியில் மோகேஷ்(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமியன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று மாலை இவரை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது அண்ணன் கலை அமுதன்(18) கிராமிய அள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மூன்று பேர் பெண்களை நோட்டமிடுவதாக கூறி அண்ணன், தம்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து மோகேஷின் உறவினர்கள் ராம்அள்ளிக்கு வந்து மோகேஷ் மற்றும் அவரது அண்ணை தாக்கியவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா, எச்.கோபிநாதம்பட்டி கூட்ரோடு இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோகேஷ் மற்றும் அவரது அண்ணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |