தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று இவர் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது .
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வசீகரமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை பெற்றவர் என்றும், அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும், நேர்மையும் இளமையுமாய் திகழும் அண்ணன் தளபதி விஜய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.