நடிகர் பவுன்ராஜ் மறைவு குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் பவுன்ராஜ் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் சில நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமடைந்தவர். மேலும் இவர் இயக்குனர் பொன்ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார் . இன்று நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு , அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்!
அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏 pic.twitter.com/g8aQI27ADU— Actor Soori (@sooriofficial) May 15, 2021
இந்நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பவுன்ராஜ் மறைவு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு, அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார் .