வீட்டிற்குள் புகுந்து அண்ணனை சரமாரியாக தாக்கிய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செந்தரை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது சகோதரரான சிவா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சிவா செல்வராஜ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாக செல்வராஜை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து செல்வராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.