Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங்கை முடித்த ரஜினி… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் அண்ணாத்த திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

First Look Rajinikanth 'Annaatthe' Movie set to release on Diwali release

மேலும் கடந்த சில தினங்களாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கிராக் ஸ்டூடியோவில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் டப்பிங்கை முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரஜினி இல்லாமல் சில காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்படவுள்ளது. விரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |