சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தின் டப்பிங்கை ரஜினிகாந்த் இன்று துவங்கியுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த இந்தப் படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது. இந்த படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு வேகத்தில் டப்பிங் பணி நடைபெற்று வருகின்றது. ரஜினிகாந்த் இந்த படத்திற்கான டப்பிங்கை இன்று சென்னையில் துவங்கியுள்ளார். ரசிகர்கள் ஆவலோடு இந்தப் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.