Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தின் மிரட்டலான புதிய போஸ்டர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த . இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அண்ணாத்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |