“அண்ணாத்த” படத்தில் நடிப்பதற்காக இரண்டு படங்களை கீர்த்தி சுரேஷ் நிராகரித்தாக தகவல் கசிந்துள்ளது.
முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் “அண்ணாத்த” படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தது அதிக சர்ச்சைக்குள்ளாகியது. இவர் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதற்காக இரண்டு பெரிய படங்களை வேண்டாம் என கூறியுள்ளார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
முதல் படம் இயக்குனர் மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” படமாகும். இவர் நிராகரித்ததால் இவரின் வாய்ப்பு திரிஷாவுக்கு போனது. இரண்டாவது படம் மலையாளத்தில் “ஸ்யாம் சிங்கா ராய்” படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தார். அந்த வாய்ப்பு சாய் பல்லவிக்கு சென்றடைந்தது. இந்தப் படம் 50 கோடி வசூலை தாண்டியது. சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடப்பட வேண்டியவை.