Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகும் நயன்தாரா…? அண்ணாத்த படத்தில் புதிய முயற்சி…!!

சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சென்ற வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. ஆனால் திடீரென்று வந்த கொரோனா  பூகம்பத்தால் படப்பிடிப்பு 4 மாதங்களாக நின்றுவிட்டது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. இந்த படப்பிடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே மீண்டும் படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளிக்கு திரை உலகிற்கு வருவதாக எதிர்பார்த்த இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் படப்பிடிப்புகளை தொடங்க இன்னும் தாமதம் ஏற்படும் நிலை இருப்பதால் பொங்கல் அன்றும் இந்தப் படம் வெளிவருவது என்பது  கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மீதி 50 சதவீத படப்பிடிப்புகள் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் கதை இது தான் என சித்திகரிக்கப்பட்ட ஒரு கதையானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அக்கதையில் ரஜினியின் முறைப் பெண்கள் குஷ்புவும், மீனாவுமாம். ரஜினியை திருமணம் செய்ய இருவரும் போட்டி போடுகிறார்களாம்.

இருவரின் மனதையும் காயப்படுத்த வேண்டாம் என எண்ணி ரஜினி நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறாராம். அதன்பின் நயன்தாரா, ரஜினி தம்பதிக்கு பிறந்த மகளான கீர்த்தி சுரேஷை தங்கள் வீட்டு மருமகளாக எப்படியாவது அடைய வேண்டும் என்று குஷ்புவும், மீனாவும் போட்டி போடுகிறார்களாம். அந்த போட்டியால் வரும் பிரச்சனைகளும், சிக்கல்களும் தான் படத்தின் முழு கதை என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன்னதாக நயன்தாரா, அண்ணாத்த படத்தில் ஒரு வழக்கறிஞராக நடிக்க இருந்ததாக கூறிவந்த நிலை மாறி, தற்போது கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |