நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்தா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் கிளம்பியுள்ளார்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான பகுதி நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
Superstar #Rajinikanth leaves for Hyderabad to commence the shooting of #Annaatthe from tomorrow! It will be the final schedule of the film. Biggest Diwali release on cards! 🔥#AnnaattheDiwali pic.twitter.com/Bej1QmSqde
— Rajinikanth Fans (@RajiniFC) April 8, 2021
இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் கிளம்பியுள்ளார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத் கிளம்பும் வீடியோ வெளியாகியுள்ளது.