Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… ஹைதராபாத் விமான நிலையத்தில் லேடி சூப்பர் ஸ்டார்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார் ‌.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார் . தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று அண்ணாத்தா படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார் . மேலும் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து நயன்தாரா இறங்கி நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது நயன்தாரா மற்றும் ரஜினி நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |