Categories
மாநில செய்திகள்

அண்ணாபல்கலைக்கழகம்… உயர்நீதிமன்றம்… பரபரப்பு உத்தரவு…!!!

அண்ணா பல்கலைக்கழகம் மீது மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தமிழகத்தில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த தேர்வுக்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால், வசூலித்த கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் திருப்பித் தர தேவையில்லை என்று கூறி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |