Categories
அரசியல்

அண்ணாமலைக்கு கெடு விதித்த அமைச்சர்…. பாஜக-திமுக யுத்தம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரம் கால அவகாசம் கொடுத்துவிட்டு இதற்குள் ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அண்ணாமலை சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இதன்பின்னரும் அண்ணாமலையை மன்னிப்பு கோர வேண்டும் என்று மீண்டும் கெடு விதித்து அதிர வைத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அண்ணாமலை மின் வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை யாருக்கு அனுப்பியது என்பதை அறியாமல் திருட்டுத்தனமாக எடுத்து உள்ள அந்த Excel இருந்தும், இதில் குறிப்பிட்டுள்ள 29.99 கோடியை  சரியாக எழுத கூட அறியாமல் All Purpose  அதிபுத்திசாலியாக தங்களை எண்ணி, 4% கமிஷன் என மீண்டும் பொய் புகாரை கழக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் அண்ணாமலை கூறி வருகிறார். ஆகவே இதற்கான ஆதாரத்தை இன்றே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அண்ணாமலை மின்சாரத் துறையில் ஊழல் நடந்துள்ளதாக கூறி உள்ளார். எனவே அவருக்கு 24 மணி நேரமும் கால அவகாசம் கொடுக்கிறேன்.

இதற்குள் அவர் இதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். தமிழக அரசியலில்  அமைச்சரின் இந்த கெடுவானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்பின்  அண்ணாமலை, “கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தகாரர்கள் எந்தவித கட்டணத்தையும் செலுத்தவில்லை. எனவே இந்த சூழ்நிலையில் திடீரென்று கமிஷன் 4% பிடித்தம் போக மீதி 29.64 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இதற்கு பதில் கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.

மேலும் நாங்கள் எதனை குறித்து பேசுகிறோம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றாக தெரியும் என்று நம்புகிறேன். சென்னையிலுள்ள அவரது வீட்டில் ஐந்து அமைச்சர்களை வைத்துக் கொண்டே 4% கமிஷனை மட்டுமே வசூலித்து வருகின்றனர். இந்த வாரம் அனல் மின்நிலையம், அடுத்த வாரம் சோலார், அதற்கு அடுத்த வாரம் இன்னும் பெரிய நிறுவனம் என வரிசையாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த ஆதாரங்களுக்கு பதிலடி கொடுத்ததோடு நில்லாமல் மீண்டும் மன்னிப்பு கேட்குமாறு கெடு விதித்துள்ளார்.

Categories

Tech |