Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வில் ஆள் மாறாட்டம்…. 126 பேர் கோர்ட்டில் ஆஜர்…. வழக்கு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் முறைகேடு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் வருடம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூலம்  இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது. அதாவது ஆள் மாற்றம், பணத்தை பெற்றுக் கொண்டு வினாத்தாளை முன்னதாகவே மாணவர்களுக்கு கொடுத்து தேர்வு எழுதி அதை தேர்வின்போது சேர்த்து கொடுத்தது என முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த முறைகேடு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்ததால் இந்த வழக்கு கடந்த 2015-ம் வருடம் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனை அடுத்து கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் 20 ஆசிரியர்கள், 127 மாணவர்கள் என மொத்தம் 147 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த 2022-ஆம் வருடம் பிப்ரவரி 28-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சம்பந்தமுடைய 147 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று இந்த வழக்கில் சம்மந்தமுடைய 126 பேர் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள், ஒரு ஆசிரியர் இறந்ததாக இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கபட்ட நிலையில்  மற்ற யாரும்  ஆஜராகவில்லை. சில பேருக்கு அவர்களது வக்கீல்கள்  ஆஜராகி விளக்கம் கொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Categories

Tech |