Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும்.விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகின்ற 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருகிற 7ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். தரிசன அனுமதி நாளை முதல் 17ஆம் தேதி வரையும், 21 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதையடுத்து இ- பாஸ் பெறுவதற்கான ஆன்லைன் முன்பதிவு செய்ய இணையதளம் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது.

அதனால் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம், ஆகியவற்றை தேர்வுசெய்து இ-பாஸ் பெறலாம். அப்போது ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான ஆவணம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Categories

Tech |