தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் 2 டேஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை கொண்டு வர வேண்டும். இதனை காண்பித்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.