Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசிக்க இன்று முதல் டிக்கெட் வெளியீடு…. பக்தர்கள் கவனத்திற்கு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.

எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீப திருவிழா அன்று காலை 4:00 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூபாய் 500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் காண 600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகளும் 500 கட்டணத்தில் ஆயிரம் அனுமதிச்சீட்டுகளும் அன்று காலை 10 மணி முதல் திருக்கோயில் இணையதளமான https://annamalaiyar.hrce.tn.gov.in இல் இன்று வெளியிடப்பட உள்ளது.

Categories

Tech |