திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்து பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீப திருவிழா மிக பிரசித்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் யாரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதனால் நடந்து முடிந்த கார்த்திகை தீப திருவிழாவில் உள்ளூர்வாசிகள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் முழக்கமிட கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்ற சிலர் அண்ணாமலையாரின் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த அண்ணாமலையார் கருவறை சிலரின் அலட்சிய போக்கால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கோவில் கருவறையை வீடியோ எடுத்த நபர்கள் மீது சைபர் கிரைமில் புகார் கொடுக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.