Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நவம்பர் 19ஆம் தேதிமலையின் மீது பிரம்மாண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். தீப திருவிழாவிற்காக 60நாட்களுக்கு முன்பு இருந்தே ஏற்பாடுகள் தொடங்கி விட்டது. வருகின்ற 23 ஆம் தேதி வரை 17 நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி நடக்கும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

Categories

Tech |