மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி எட்டயபுரத்திலுள்ள அவரது மணிமண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதியின் எம்எல்ஏ மார்கண்டேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, சத்துணவில் வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல் நடந்ததாக அண்ணாமலை அர்த்தமற்ற முறையில் பேசுவதாக அவர் விமர்சித்து இருக்கிறார். மேலும் முட்டை கொள்முதல் வெளிப்படையாகவே நடக்கிறது. இவற்றில் ஊழல் என்ற பேச்சிற்கே இடமில்லை. இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டு இருக்கிறேன். எனினும் இது அண்ணாமலை மண்டையில் தான் ஏறவில்லை. அவருக்கு சரியான புரிதல் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது” என்று அவர் பேசினார்.