Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை அளித்த புகார்…. நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி…. எதற்காக தெரியுமா?…..!!!!!

நேற்று முன்தினம் இந்திய பிரதமர் மோடியும், நேற்று ஒன்றிய உள் துறை அமைச்சரான அமித்ஷாவும் தமிழகம் வந்தனர். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது “அமித்ஷா தலைமையில் நடந்த மாநில பா.ஜ.க ஆலோசனை கூட்டத்தில் முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சி பற்றி பேசப்பட்டது. தமிழக மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?, ஏதேனும் நான் பிரதமரிடம் கொண்டுசெல்ல வேண்டுமா? என்று அவர் கேட்டறிந்தார்.

மாநில தலைவர் எனும் முறையில் நேற்று முன் தினம் பிரதமர் மோடியுடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்நிலையில் அவரும் தமிழக மக்களுக்கு நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம், இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிந்தார். தமிழக மக்கள் மீது பா.ஜ.க தலைவர்கள் மிகுந்த பாசம் மற்றும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

சமூகவலைத்தளத்தில் பதிவிடப்படும் கருத்துகளுக்காக பா.ஜ.க-வினர் மீது எப்படிப்பட்ட பொய்வழக்குகளை பதிவு செய்கின்றனர் என எங்களது கட்சியின் சமூகவலைத்தள பிரிவு தலைவர் நிர்மல்குமார் மற்றும் மாநில துணை தலைவர் பால்கனகராஜ் போன்றோர் ஒரு பட்டியலை அமித்ஷாவிடம் அளித்தனர். அதன்பின் இதனை என்னவென்று பார்த்து நடவடிக்கை மேற்கொள்கிறேன் என அமித் ஷா உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி பா.ஜ.க மூத்த நிர்வாகிகளிடம் அமித்ஷா கேட்டறிந்தார்” என்று கூறினார்.

Categories

Tech |