காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் 38,000 கோவில்களின் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு ஜாதி தடையாக இல்லை. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 356 இடங்களில் பாஜக குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக வரும் மாநகராட்சி, நகராட்சி ,சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும்.
மின்வாரிய துறையில் திமுக அரசு ஏற்படுத்தி இருந்த ஊழலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் திமுக ஆட்சியில் தமிழகம் ஒருபோதும் மின் துறையில் தன்னிறைவு பெறாமல் மின்சாரத்தை கொள்முதல் செய்துவரும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.