செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேளாண் சட்டம் திரும்ப பெற்ற பின்பும் விவசாயிகள் போராட்டம் நடத்தியது குறித்து பேசிய அவர், திரும்ப போராட வேண்டுமென்றால் நான் தானே போராடுகிறேன், நீங்க இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருக்கின்ற அருமை சகோதரர் அண்ணாமலை அவர்கள் பேசிய பேச்சை நீங்கள் பாக்குறீங்களா ? 500 ஆண்டுகள் ஆனாலும் ஒரு கமாவை கூட நாங்கள் மாற்ற மாட்டோம், பயப்படுவதற்கு காங்கிரஸ் கிடையாது, பிஜேபி என்று பேசினது இருக்கு.
அப்போ எதுக்கு திடீர்னு நீங்க தீடிரென பின் வாங்குறீங்க என்றால் ? அப்போ 500 ஆண்டை விட்டுவிட்டு 5 மாநில தேர்தலுக்காக இது நடக்கிறது. மத்திய அமைச்சர் பேசினது அப்படியே நான் பேசி காட்டுகிறேன்…. நாங்கள் வேளான் சட்டத்தை திரும்பப் பெறுவது என்பது கூட்டு இணைவு, அதாவது கார்ப்பரேட்டுகள் எங்க அரசின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை நாங்கள் இழந்து விடுவோம், அதனால் திரும்ப பெற முடியாது என்கிறார்.
அப்போ அதை கொண்டு வந்ததே கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தான். அப்படி இருந்தவர்கள் திடீரென்று நான் திரும்ப பெறுகிறேன் என்பதை எப்படி ஏற்பது ? இது எவ்வளவு பெரிய நாடாகமாக இருக்கும். குறிப்பாக பஞ்சாபில் நடக்கின்ற மாநில தேர்தல், உத்தர பிரதேசத்தில் நடக்கின்ற மாநில தேர்தல், இந்த 5 மாநில தேர்தலில் கவனத்தில் கொண்டு நீங்கள் பேசுகிறீர்கள். அதனால் நம் ஆட்கள் என கேட்கிறார்கள் உன்னை நம்ப முடியாது ராஜா… இப்படி நான் நிறைய பார்த்து இருக்கேன்.
நீங்கள் சட்டவரைவாக சொல்லுங்கள் பாராளுமன்றத்தில் ஏதாவது அதை ஒரே ஒரு முறை பேசுங்கள், ஒரு சட்ட வரைவாக இல்ல நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் அப்படி என்று சொன்னால்தான் நம்பிக்கை வரும், இல்ல நீங்கள் வேறு வடிவத்தில் கொண்டு வருவீங்க. அதனால் அதை நம்ப இயலாது என்கிறார்கள் என தெரிவித்தார்.