Categories
அரசியல்

அண்ணாமலை போட்ட திடீர் உத்தரவு…. வாயடைத்து போன பா.ஜ.க நிர்வாகிகள்….!!!

பா.ஜ.க மாநில மாநிலத் தலைவர் கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரப்பாக்கத்தில் பா.ஜ.க கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட  நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசினார். அவர் கட்சியை வலுப்படுத்துவதற்கு நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். அதன் பிறகு கிராமங்கள் தோறும் பா.ஜ.க கட்சியை கொண்டு சென்று கிளைகள் அமைக்க வேண்டும்.

இதனையடுத்து கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்து திட்டங்களில் சேர வலியுறுத்தி அவர்களை பயன் அடைய செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து  நிர்வாகிகள் கிராமங்கள் தோறும் சென்று மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். மேலும் இன்று நடைபெற இருக்கும் பா.ஜ.க கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், தி.மு.க கட்சிக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |