தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் வசிக்கும் தம்பதிகள் கனகராஜ் – காந்திமதி. இவர்களுக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆன நிலையில் என்ற கரன்ராஜ்(18) என்ற மகனும், இந்துமதி(18) என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து அவருடைய இரண்டு பிள்ளைகளும் காந்திமதியுடன் சென்றுள்ளனர். காந்திமதி தன்னுடைய அம்மாவுடன் வசித்து தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து காந்திமதி அம்மா வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் தன்னுடைய குழந்தைகளை அப்பா வீட்டிற்கு செல்லுமாறும், அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கிறேன் எனவே அப்பாவிடம் சென்று விடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் தன்னுடைய அப்பாவிடம் சென்றுள்ளனர். ஆனால் அவரோ இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? இப்போது சொத்திற்காக வந்துள்ளீர்களா? என்று அவர்களை விரட்டி அடித்துள்ளார்.
இந்நிலையில் அம்மாவும் அப்பாவும் தங்களை கைவிட்ட நிலையில், அண்ணன், தங்கை இருவரும் மனம் உடைந்து விஷத்தை வாங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதையடுத்து மயங்கி விழுந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.