அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க தேர்தலில் மோதல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மண்டல போக்குவரத்து கழகம் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு என்பது இன்று நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு நிர்வாகிகளுக்குமே போட்டியின்றி தேர்வு என்பது நடைபெற்றிருக்கிறது.. இந்த நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 16 போக்குவரத்து பணி மனைகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றிருக்கிறது.
இதில் செக்கானூரணி போக்குவரத்து பணிமனைக்கான கிளை செயலாளராக முருகன் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. தொடர்ந்து வாக்குவாதம் என்பது முற்றிய நிலையில் கிளை செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட முருகன் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே பலத்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது..
பெரும்பாலான பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், செக்கானூரணி கிளை செயலாளர் பதவிக்கு அதிக அளவில் போட்டி இருப்பதன் காரணமாக இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவேதான் இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டு வருவதால் போலீசார் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதி பரபரப்பான சூழலில் இருக்கிறது. தற்போது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி என்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.