Categories
மாநில செய்திகள்

அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம்…. தலைமை செயலாளர் உத்தரவு….!!!

தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையத்தை, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தியில், அண்ணா மேலாண்மை நிலையம் இனிவரும் நாட்களில் இருந்து அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என்று அழைக்கப்படும். மேலும் நிர்வாக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் தான் அண்ணா மேலாண்மை நிறுவனம் என்பதை கருத்தில் கொண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சி பணியாளர்களுக்கான வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும் நிலையில் மேலாண்மை நிலையம் என்று அழைக்கப்படுவதில் செயல்பாடுகள் குறித்த தெளிவின்மை இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அண்ணா மேலாண்மை நிலையம் என அழைக்கப்பட்டு வந்ததால் செயல்பாட்டில் குழப்பம் நிலவி வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |