அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடி தேர்வு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து கடந்த 1ஆம் தேதி அறிவியல், கலை, பொறியியல் கல்லூரிகளில் மற்றவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைகழகத்தில் தொலைதூரக்கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடி தேர்வு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 9 ஆம் தேதிக்கும், நாளை நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 10ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.