Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையதளத்தில் தமிழ்மொழி திடீர் புறக்கணிப்பு… அதிர்ச்சியில் மாணவர்கள்….!!!!!!

அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம், 10 ஆண்டுகளுக்கு பின் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழக அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் 10 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, செயலர் கார்த்திகேயன் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த துணைவேந்தர் வேல்ராஜூக்கு  உத்தரவிட்டிருந்தனர்.

குழப்பமான வடிவம் இதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் பழைய இணையதள பக்கங்கள் முழுமையாக மாற்றப்பட்டு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது. புதிய பக்கங்களை கவர்ச்சியாக பலவண்ண பாடங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை ஐஐடியில் ஆங்கிலத்துடன் ஹிந்தியில் இணையதள பக்கங்களை வடிவமைத்திருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என திமுக அரசு கூறி வருகிறது. தமிழ் மொழி கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதனால் இன்ஜினியரிங் படிப்புகளை தமிழ் வழியில் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்திருக்கிறது.

தாய்மொழியே மகத்துவமானது  அதனை கல்வி நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தின் பெருமையை சர்வதேச அளவில் பறைசாற்றிய அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை கூட தமிழில் வடிவமைக்காதது  மாணவர்களை  வருத்தம் அடையச் செய்திருக்கிறது.

Categories

Tech |