அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் எம்பிஏ மற்றும் எம் சி ஏ படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிடப் பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் சார்பாக எம்பிஏ மற்றும் எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கான சேர்க்கை தொலைதூர கல்வி நுழைவுத் தேர்வு அல்லது டான்செட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.
இந்நிலையில் இந்தப் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.மற்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கும் தேதி admissions.annauniv.edu என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது.