அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் பாடங்களை கற்பிப்பதற்கு தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பல்கலைத் துறைகளில் ஆறு பணியிடங்களும் உறுப்பு கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில் எம் ஏ , பி ஏ ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை கல்வி சான்றிதழ் நகலுடன் நேரடியாக அல்லது ஸ்கேன் செய்து pdf வடிவில் மின்னஞ்சல் மூலமாக [email protected]என்ற மின்னஞ்சல் முகவரியில் டிசம்பர் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044-22358592, 22358593 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது