சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான தூரப்பாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் முன்னால் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கிண்டியில் இருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் துணை பொதுச் செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.