சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றுள்ளார். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். மோடி வருகையை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வணக்கம் எனது தமிழில் கூறி உரையை தொடங்கியுள்ளார் மோடி.
பட்டம் பெறும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் இன்றைய இளைஞர் உலகமே உற்று நோக்குகிறது. நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்று வருகின்றனர். அப்துல் கலாமின் கருத்துக்கள் இளைஞர்களை ஊக்கம் பெற செய்வது என பேசி உள்ளார். முன்னதாக இரண்டு நாள் சுற்றுப்பயனாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி நேற்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் நண்பகலில் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் டெல்லி செல்கின்றார்.