Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செம ஷாக் நியூஸ்….!! வெளியான அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவலின் மூன்றாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் பரவல் வேகம் சற்று தணிந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்பட்டுவரும் 420 கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன.

எனினும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு சில துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளதாக முதுகலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எம்பிஏ மற்றும் முதுகலை மாணவர்கள் சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது.

Categories

Tech |