தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ்புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் புயல் எதிரொலியாக டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால் அந்த தேர்வுகள் டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.