அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது.
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய மனித வளத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பல்வேறு கருத்துக்களை அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தற்போதுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்றும் உயர் சிறப்பு அந்தஸ்து ஒருபோதும் தேவையில்லை என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
அந்தக் கடிதத்தில் துணைவேந்தர் சூரப்பா கூறியது போலவே அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட இயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது பற்றி ஆலோசனை செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில், கேபி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணியின், ஜெயக்குமார், சிவி.சண்முகம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.