Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று குறைந்ததால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். எனினும் பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் ஆகிய மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளானது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மார்ச் 7 (இன்று) முதல் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்தநிலையில் அண்ணா பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் எப்போது நேரடி வகுப்புகள் நடைபெறும் என்பது தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கும் மார்ச் 16ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, நடப்பு செமஸ்டருக்கான பாடத்திட்ட பகுதிகள் ஜூன் 16ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்மல் செய்முறை தேர்வு ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் எனவும் அதேபோன்று இறுதி செமஸ்டருக்கான எழுத்துத்தேர்வு ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைகழகம் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |