அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். பதவிக்காலம் முடிந்து சூரப்பா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வேல்ராஜ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வேல்ராஜ் துணைவேந்தராக மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.
இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்வித் துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர். 7 நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.