புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் பாடத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டம் நடைபெற உள்ளது .அந்தக் கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆராய்ச்சி ஊக்குவித்தல், தனித்திறனை வெளி கொணறுதல், தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் அமைய உள்ளது.வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக பொறியியல் பாடத்திட்டம் 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது மாற்றப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலாக உள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்திட்டங்கள் நடைபாண்டில் மாற்றியமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த புதிய பாடத்திட்டம் வருகின்ற 18ஆம் தேதி வெளியாகின்றது.இந்நிலையில் இந்த பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக வருகின்ற 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் பஸ் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.மேலும் இன்று நடக்க உள்ள கவுன்சிலிங் கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.